Tuesday 28 July 2015

ஜோதிடப் பாடல்களும், வீளக்கங்களும் ....





+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொய்யவன் தன்னுடனே கதிரோன் சேர்ந்து
பொன்னவனைத் தான் பகைத்துப் பார்ப்பாகில்
வெய்யவனும் லக்கினத்தைச் சேர்ந்தே நிற்கில்
வேண அஷ்ட ஐஸ்வர்பர்யம் இருந்தாலும்
செய்யவன் தன் பொசிப்பதுவே நாய் தீண்டாது.
செய்கையெனப் பொசிப்பெடுப்பன் செய்யுள் மார்க்கம்
வையகத்திலிரவன் போல் ஆடையில்லான்
வார்த்தை லட்சம் பொன் பெறுவான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செய்கை = ஒழுக்கம், தொழில் :
பொசிப்பு = இரகசியம், கசிதல், வெளிப்படல்;

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நாம் சில நேரங்களில் சிலவார்த்தைகளை அனுபவத்தில் இருந்து பேசுவோம். அப்படியப்பட்ட வார்த்தைதான், “ நீ போடுற சோத்தை, நாய் கூட திங்காது “ என்பது. ஆம். முகநூல் உறவுகளே! அதுபோன்ற பாடல்தான், இன்று என் கண்ணில் பட்டது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒருவர் எந்த இலக்கினமாக இருந்தாலும், கதிரவன் என்கிற சூரியனும், பொய்யவன் என்கிற புதனும் கூடி பகைபெற்ற வீட்டில் நின்று, பொன்னவனான குருவைக் காணவும்,  இலக்கினத்தை செய்யவன் எனும் சூரியன் பகைத்து நிற்கில், எவ்வளவு பெரிய சொத்துக்காரனாக இருந்தாலும், இவன் வீட்டுச் சோற்றை நாய் கூடத் தின்னாது. ஆனால், இவன் பேசத் துவங்கினால், இவன் பேச்சைக் கேட்க, இலட்ச ரூபாய் செலவழித்தும் பலர் கேட்கத் தயாராக உள்ளனர். இந்த உலகத்தில் ஆடையற்ற நிர்வாணமான உண்மைகளையும், இரகசியம் காக்கும் ஒழுக்க நெறிகளைப் பற்றியும், இது போன்ற பாடல்களின் மூலம் வெளிப்படுத்தலாம்.

பாடல்; 2
++++++++++++++++++++++++++++++++++++++++ 
வல்லவனாம் கேதுவுடனே செவ்வாய் கூடி
வருந்தியே லக்கினத்தைப் பார்ப்பாராகில்
நல்லவனாம் அவர் திசை விட்டு ஏகும் காலம்
நலமான நிதி புதையல் எடுக்கும் யோகம்
மெல்லவர்க்கு பிரியமுள்ளான் கீர்த்திமானாய்
--------------------- பலவித்தை கற்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++

எல்லா கிரகங்களிலும் வலிமை மிக்க கேதுவுடன், போராட்டக் குணமுடைய செவ்வாய் கூடி நின்று, இலக்கினத்தைப் பார்த்தால், இவ்விருவரின் தசாகாலங்களின் முடிவுக்குள் புதையல் கிடைக்கும். அதேபோல, எல்லோருக்கும் பிரியமுள்ளவனாகவும், எவர்க்கும் அஞ்சாத வெற்றியாளர்களாகவும், பலவித்தைகளைக் கற்றவனாகவும் இருப்பான்.
இது பாடல் விளக்கமாகும். இலக்கினத்திற்கு ஏழாமிடத்தினில் இரு கிரகங்களும் கூடியிருந்தால் தான், மேலே சொன்னப்பலன்கள் நடக்கும். ஆனால், இது இல்லற வாழ்வை பாதிக்கும் அமைப்பாகும். கேது ஏழாமிடத்தில் இருந்து, செவ்வாய் முன்னும் பின்னுமாக இருந்து இலக்கினத்தைப் பார்த்தாலும், இவ்விதி பொருந்தும் தானே.

பாடல் ; 3

---- சுகர்நாடி ஜோதிடப்பாடல் ---

நம் பாட்டன் பாடிய பாடல்தான். எனக்கு பாடல் மட்டும் வேண்டும் என்பவர்கள், பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை எங்களுக்கு விதிகள் மட்டும் போதும் என்பவர்கள் விதிகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் எங்களைப் போன்றவர்களை ஆளை விடுங்க.
--- இப்போது பாடல் ----

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பண்டிதன் கேந்திரத்தில் இருக்க வாக்கோனும் உச்சம் பெற அப் பால் போல் வெள்ளி
விண்ட(வ்) உபயத்து இருக்க அல்லது உச்சமேல் இருக்க, விரும்பும் தூயோர்
மண்டியொரு மூன்றில் ஏவ அருட் குரு நோக்கம் வாய்ந்த பாலன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கினத்திற்கு கேந்திர வீடுகளான 1, 4, 7, 10 வீடுகளில் ஒன்றில் புதன் இருந்து, இரண்டுக்குடையவன் உச்சம் பெற்று இருக்கவும், பால் போல் வெண்மை நிற ஓளியைக் கொண்ட சுக்கிரன் உபயராசிகளிலோ, அல்லது உச்சம் பெற்றோ இருக்கவும், மூன்றாமிடமான எழுத்து, கணிதம், பதிப்பகம், தொலைக்காட்சி, இதழ்கள், விளம்பரம், புதுப்புது நுணுக்கங்கங்களைக் குறிக்கும் இடத்தினில் சுபக்கிரகம் இருக்கவும், மூன்றினில் இருக்கும் சுபரை மற்றொரு சுபரான குரு காணவும், அமைப்புடைய ஜாதகரை,

“ தெண்டிரை ஞாலம் புகழும் சோதிட வித்வான் எனவே செப்பலாமே! “

இது ஒரு பாடல் தான். ஆனால், இது போன்ற பல்லாயிரக்கணக்கான ஜோதிடப் பாடல்கள், உரையெழுதி முடிக்காமல் கிடக்கின்றன. நன்றி.  
91501 06069

No comments:

Post a Comment