Friday 13 March 2015

உணவு


இலக்கினத்திற்கு  இரண்டு, ஐந்தாமதிபதிகள் தான், உணவின் சுவையை உணரும் தன்மையை தருகின்றன.

உணவு உட்கொள்ளும் விதத்தை, இரண்டாமிடத்தைக் கொண்டும், உணவு செரிமானத்தை, ஆறாமிடத்தைக் கொண்டும் அளவிடலாம்.

இரண்டாமதிபதி பாவக்கிரகங்களுடன் கூடினாலும், இரண்டாமிடத்தில் பாவக்கிரகங்கள் நின்றாலும், அதிகமான உணவை உட்கொள்வார்.

இலக்கினத்தில் குரு நின்றாலும், இலக்கினத்தில் புதனும், ஆறாமிடத்தோனும், இராகுவும் கூடி நின்றால், முன் ஜென்ம கர்மவினைப் பயனால், அதிக உணவை உண்பான்.

இலக்கினத்திலும், அதற்கு 7, 10 லும் புதன் நிற்கபலவித சுவைகொண்ட, கலப்பு உணவை உட்கொள்வார்.

இலக்கினத்திலும், அதற்கு 7, 10 லும் சூரியன் செவ்வாய் நிற்கவும், இலக்கினத்திற்கு ஏழாமதிபதி, இலக்கினத்திலும், 7, 10 லும் நிற்க, பலவித சுவைகொண்டகலப்பு உனைவை உட்கொள்வார்.

இரண்டாமதிபதியுடன், குரு, புதன் கூட, அல்லது காண, மிகச்சிறந்த உணவே கிட்டும்.

செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஆறில்  அமர்ந்து, சனி காண, அதிக உணவை உட்கொள்வார்.
இனி சிறுகதை ஒன்றைக் காண்போம்.

முல்லாவைக் காண, அவர் நண்பர் ஒரு, “வெடக்கோழியையோடு வந்தார். அன்று மதியம் முல்லாவும், “தடபுடலானவிருந்து கொடுத்து, தன் நண்பரை அசத்தினார். இருவரும் அளவளாவி மகிழ்ந்தனர். மாலையில் நண்பரும் விடைபெற்றார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஒருவர் வந்தார். வந்தவர்தங்களின் நண்பரின் நண்பர்என்று அறிமுகமானார். அன்றும் அவர்க்கு விருந்துபசாரம் வழங்கி அனுப்பி வைத்தார். இன்னும் சிலநாட்கள் கழிந்தன. இப்போதும் முல்லாவைத்தேடி ஒருவர் வந்தார். வந்தவர் முல்லாவிடம், “ கோழி கொண்டுவந்த நண்பரின், நண்பர்க்கு நண்பன் நான்என்றார். தன்னுடைய நண்பனுக்காக அவரின் நண்பரின் நண்பர்க்கு விருந்துபசாரம் செய்து அனுப்பி வைத்தார்.

சிலநாட்கள் கழிந்தன. அப்போதும் முல்லாவைத் தேடி ஒருவர் வந்தார். வந்தவர், “கோழி கொண்டு வந்த நண்பரின் நண்பர்க்கு, நண்பன் நான்என்றார். முல்லாவுக்கு சின்ன சந்தேகம். தான் ஏமாற்றப்படுகிறோமோ என்று எண்ணினார். இவர்க்கு பாடம் கற்பிக்கவேண்டும் என எண்ணி, அந்த நண்பரை அழைத்து உபசரித்து அமரச் செய்தார். அடுக்களையில் இருக்கும் தன்மனைவியிடம் சென்று, அவள் காதில் ஏதோ சொன்னார். அவளும் தலையாட்டினாள். அந்த நண்பரிடம் சென்ற முல்லா, “இன்று உங்களுக்கு அருமையான கோழி சூப் தருவதாக இருக்கிறேன்என்றார். சிறிது நேரத்தில் முல்லாவின் மனைவி, கைகளில் ஆவி பறக்க, குவளையோடு வந்து தந்தாள். அதிக ஆவலோடு பெற்று, இன்று நல்ல வேட்டை என நினைத்து அருந்தத் துவங்கியவருக்கு, “ச்சீச்என்றானது அவர் முல்லாவிடம், “கோழி சூப் என்றீர்கள். வெறும் சுடுதண்ணீராக உள்ளதேஎன்றார். முல்லாவோ, “என்ன நண்பரே, செய்வது, என்னுடைய நண்பர் ஒரு கோழி கொண்டுவந்தார். அவர்க்கு சூப்வைத்தபின் வரிசையாக, அவரின் நண்பரும், நண்பர்க்கு நண்பரும், அவரின் நண்பருமாக எல்லோரும் வந்தீர்கள். நானும் நண்பர்க்கு வைத்த சூப்பினுடைய சூப்பினுடைய, சூப்பினுடைய சூப்பும் வைத்தேன். அது சுடுநீராகப் போனது”  எனச் சொல்ல, விருந்தாளி சொல்லாமல் கொள்ளாமல் போயே விட்டார்.    
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.


No comments:

Post a Comment