Friday 13 March 2015

இது சூஃபி அறிஞரின் கதை.


ஒரு அரசனோடு சூஃபி அறிஞர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அரசருக்கு அளவுக்கதிகமாக தண்ணீர் தாகம் எடுத்தது. உடனே சேவகனிடம் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார். தண்ணீர் கொணடு வரப்பட்டது. தாகம் தீர்க்க, தண்ணீர் குவளையை வாயருகே கொண்டு செல்லப் போகும் தருணத்தில்,, அவரை குடிக்கவிடாமல், சூஃபி ஞானி தடுத்து, , “அரசே, என் கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டு, அதன் பிறகு தாராளமாக தண்ணீரை அருந்துங்கள்என்றார். அதற்கு அரசர், “கேளுங்கள் அறிஞரேஎன்றார்.  உடனே சூஃபி ஞானி, இப்போது  நீங்கள் காட்டுக்குள் தன்னந்தனியனாய் சிக்கிக் கொண்டீர்கள். வந்த பாதையும் தெரியவில்லை. போகிற பாதையும் புரியவில்லை. அந்த நிலையில் சிக்கிய உங்களுக்கு, தண்ணீர் தாகம் எடுக்கிறது. அங்குமிங்கும் அலைகிறீர்கள். எங்கும் கிடைக்கவில்லை. அப்போது அங்கே ஒருவர் வருகிறார். அவரிடம் கெஞ்சுகிறீர்கள். “நான் இந்நாட்டு மன்னன் நா வறண்டு விட்டது. தண்ணீர் தாருங்கள் நீங்கள் தண்ணீர் தரவில்லை என்றால், என் உயிர் அநியாயமாகப் பிரிந்து விடும்என்கிறீர்கள். அவரும் உங்கள் மேல் பரிதாபப்பட்டு தன்னிடமிருந்த ஒரு குவளை நீரை உங்களுக்குத் தருகிறார். நீங்களும் பருகி உயிரை காப்பாற்றிக் கொள்ளுகிறீர்கள். இப்போது ஒரு குவளைத் தண்ணீர் தந்து உங்கள் உயிரைக் காப்பாற்றியஅந்த நபருக்கு, இந்நாட்டின் மன்னனாய், என்ன பரிசில் வழங்குவீர்கள்என்றார். அதற்கு மன்னன், “ ஒரு குவளை நீர் தந்து என் உயிரைக் காப்பாற்றிய புண்ணியவானுக்கு, இந்த நாட்டின் பாதிப்பகுதியை பரிசிலாகத் தந்துவிடுவேன்என்றார்.  “ நல்லது அரசே, இப்போது நீங்கள் நீரை அருந்துங்கள்என்றார் சூஃபி ஞானி. நீரருந்தி முடித்த அரசரிடம், “ அரசே, இன்னொரு கேள்வி, இப்போது அருந்திய நீர், சிறுநீராக வெளியேறியாக வேண்டும் அல்லவா? அப்படி வெளியேறாமல், உங்கள் உடம்பிலே தங்கிக் கொண்டால், அது உடம்பிலே தங்கி உங்கள் உயிருக்கு ஆபத்தையும் தந்துவிடும் அல்லவா? அதனால், அதை வைத்தியத்தால் வெளியேற்றிவிடும் வைத்தியனுக்கு நீங்கள் என்ன பரிசில் வழங்குவீர்கள்,” என்றார் சூஃபி ஞானி. அதற்கும் அரசன் சளைக்காமல், “சூஃபி ஞானியே, என் உடம்பிலே தங்கிவிடும் அசுத்த நீரை வெளியேற்றி, என்னுயிரைக் காப்பாற்றி விடும் வைத்தியனுக்கு, என் நாட்டின் மீதிப்பகுதியை தந்துவிடுவேன்என்றார் அரசர்அதற்கு சூஃபி ஞானி,”அரசே, உங்கள் நாடும், ஒரு குவளை நீரும் ஒன்றாகிப் போய்விட்டதே. குவளைத் தண்ணீரின் மதிப்பைக் கொண்ட நாட்டில் தான் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கீறீர்கள், அதிகாரம் பண்ணுகிறீர்கள், சரியோ,தவறோ நீதிவிசாரணை செய்கிறீர்கள், தீர்ப்பிடுகிறீர்கள், இவையெல்லாம் தவறு என்று உங்களுக்குத் தெரியாதா?என்று கூறிவிட்டு, அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

இந்த, “ முகநூலும்மதிப்பற்றதுதான். ஆனாலும், தொங்கிக் கொண்டு இருக்கிறோம்வாழ்த்துகள் நன்றி.   

No comments:

Post a Comment