Friday 13 March 2015

சொத்தைப் பறிகொடுத்தவர் யார்?



1.இலக்கினத்திற்கு 11க்குடையக் கோள் மறைவிடங்களில் ஒன்றில் இருக்க, 2,6,12க்குடையக் கோள்களுக்குள் தொடர்பும் ஏற்பட, தன்னிடமுள்ள அசையும் சொத்துக்களைப் பறிகொடுப்பான். இவர்களோடு குரு தொடர்பு கொண்டால், தங்கத்தையும், சுக்கிரன் தொடர்பு கொண்டால், வெள்ளிப் பொருட்களையும் பறிகொடுப்பார். எந்த கிரகம் இவர்களோடு தொடர்பு கொள்கிறதோ, அந்த கிரகத்திற்குத் தொடர்புடைய இரத்தினங்களை இழப்பார்.

2. 11க்குடையக் கோள் பணத்தின் அதிபதி, 12க்குடையவன்  மூவருடன் 6மிடத்தில் தொடர்பு கொள்ள, தன் செல்வங்களைப் பிறரிடம் இழப்பார்.

3. 2 மதிபதி 6 மிடத்தில் இருக்க, இரண்டாமிடத்தினில் 12 மிடத்தோன், இருந்றாலும், 9, 11 க்குரியவர்கள் விரையத்தில் இருந்தாலும், தன்னுடைய சொத்துக்களை பறிகொடுப்பார்.
யார் யாரெல்லாம் சொத்துக்களைப் பறிக்கொடுப்பவர்கள் என்று ஜோதிடத்தில் சிலவிதிகளைக் கண்டோம். இனி சிறுகதை ஒன்றைப் பார்ப்போமா?

முல்லாவின் வீட்டுக்குள் திருடன்கள் நுழைந்து விட்டனர். ஒவ்வொரு அறையாக   தேடி வந்தனர். திருடுவதற்கான மதிப்பானப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. முல்லா படுத்துறங்கும்  அறைக்கு அருகிலும் வந்துவிட்டார்கள். அவர்களின் காலடிச் சப்தம் கேட்டு எழுந்த முல்லா, வந்தவர்கள் திருடன்கள்தான் என்று உறுதி செய்து கொண்டு, அவசர அவசரமாக அங்கிருந்த அலமாரியைத் திறந்து, அதற்குள் அமர்ந்து கதை மூடிக்கொண்டார். முல்லாவின் வீட்டுக்குள் திருடுவதற்கு எதுவுமில்லாமல், வெறுங்கையுடன் முல்லா ஒளிந்திருந்த அலமாரியின் அருகில் ஆத்திரத்தோடு நின்று கொண்டிருந்தனர். இந்த அலமாரிக்குள் மட்டும் எதுவும் கிடைக்கவில்லையென்றால், இந்த வீட்டையே கொளுத்திவிடவேண்டும் என்று திட்டமிட்டனர். இப்போது அலமாரியை உடைத்தனர்.  அங்கே முல்லா ஒளிந்திருப்பதைக் கண்டு வெளியே இழுத்தனர். “இவ்வளவு பெரிய வீட்டில் தங்காமல், அலமாரிக்குள் என்ன செய்கிறீர்என்றனர். அதற்கு முல்லா, “இவ்வளவு கஷ்டப்பட்டு என்வீட்டையும், என்னையும் மதித்து திருட வந்துருக்கீக. ஆனா உங்களுக்குத் திருடக் கொடுக்க என்னிடமும், என் வீட்டுக்குள்ளேயும் எதுவுமில்லை. அதனால தான் வெக்கப்பட்டு ஒளிஞ்சிருந்தேன். இனி திருட வரும்போடு சொல்லிட்டு வாங்க, திருடுற அளவுக்கு பொருள்கள வாங்கி வைக்கிறேன் ”  என்றார்.திருடன்களும் வெட்கப்பட்டுப் போனார்கள்.

திருடர்களும், வழிப்பறி செய்வோரைப் போல, மக்களும் ஏழைகள்தான்.  

  

No comments:

Post a Comment