Sunday 22 March 2015

சிந்தனை துளிகள்.

#################################################################
தோற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மனிதனும் தோற்றுப் போகிறான்
வெற்றி தோல்வியை சாவைப்போல, எதிர்பார்க்க வேண்டும்.
#######################################################
உங்களின் எதிர்கால பலன்களைச் சொல்வது மட்டும், ஜோதிடத்தின் வேலையல்ல. சொல்லப்பட்டதில் இருந்து, நீங்கள் எப்படி விடுபட்டு, வாழ்க்கையையை தகவமைத்துக் கொள்கிறீர்கள் என்று சொல்வதே ஜோதிடம்.
விடியலை காட்டுவது மட்டுமல்ல…. அதை நோக்கி நம்மை நகர்த்துவதும் ஜோதிடம்தான்.
########################################################
இந்த மாயையான facebook ல், கமெண்ட் போட்டு, "கலாய்ப்பது", காற்றிலே கத்தி வீசுவதற்கு சமமாகும்.
#######################################################
நம் உள்ளம் கோவிலாக இருக்கவேண்டுமென்றால், அதனுள் இருக்கும் எல்லா குப்பைகளையும் கூட்டி வெளியே தள்ளுங்கள்.
########################################################
என்னுடைய "உள் டப்பியில்" வந்து, இலவசமாக ஜாதகம் பார்க்க கோரிக்கை வைக்காதீர்கள்.
நான் பிறக்கும் போது, தாய்க்கு வலியையும், தந்தைக்கு செலவையும் தந்து தான் பிறந்தேன்.
இதற்கு மேலும் தொந்தரவு செய்தால், என் நட்பு வட்டத்தில் இருந்து விலக்கப்படுவீர்கள்.
#######################################################
ஜோதிடத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், "அஸ்ட்ரோ" என்று போட்டுக் கொள்வதைப் போல, வாழ்க்கையை வாழத்தெரியாமலே வாழ்ந்து முடித்துவிடுகிறோம்.
#######################################################
விடிந்ததில் இருந்து உறங்கப் போகும் வரை எத்தனை ஆணவக்குரல்களைக் கேட்டு விடுகிறோம். இதில் நம்முடையவை மட்டும் எத்தனை? இந்த ஆணவம் எங்கிருந்து வருகிறது. ஏன்? உனக்குப் பின்னே உள்ளவர் கோடி என்பதாலா?
#######################################################

No comments:

Post a Comment