Sunday 22 March 2015

சிந்தனை துளிகள் 3




################################
நாமும் மனித மனங்களை அனுசரனையாய் வில்லில் இருந்து இலக்கைத் தாக்கும் அம்பைப் போல, வென்றெடுப்போம்.
################################
வக்கிரக் குருவிடம் வகையாக மாட்டிக் கொண்டேன். சுற்றிச்சுழன்று அடிக்கிறது.
##############################
ஒருவரை கடுமையாகப் பேசும் போது, அந்த வார்த்தைகளின் வீரியம் எப்படி இருக்கும் என்று தனிமையில் இருக்கும்போது, சிந்தித்துப் பாருங்கள்.
#############################
விளைந்த நெற்கதிர் தலைவணங்கித்தான் இருக்கும். ஆனால், தலைநிமிர்ந்து இருப்பதாக "பதர்" நினைக்குமாம்.
அதன் நினைப்புக்கு நாம் பரிதாபப்படத்தான் முடிகிறது.
##############################
மனிதர்களுக்கு மறதியெனும் நோய் மட்டும் இல்லாமல் போனால், இந்த உலகமே பைத்தியங்கள் நிரம்பியதாக இருக்கும்.
##############################
சொர்க்கத்தின் திறகுகோல் ஜோதிடர்களாகிய நம்மிடம் தான் உள்ளது. அதில் நாமும் நுழைவதில்லை.. அடுத்தவரையும் நுழைய விடுவதில்லை.
##############################
நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதைவிட, "தமிழன்" என்று சொல்லிக் கொள்வதில்தான் மகிழ்ச்சியடைவேன்.
################################
நம்மை உணரும் நொடியில் ஞானம் கிடைத்துவிடும் என்பது, உண்மையானால். நம்மில ஞானியர் அதிகமில்லையே ஏன்?
அந்த ஞானத்தை, ஆத்மாவுக்குள் நிலைநிறுத்த முடிவதில்லை.
################################
எல்லாவற்றிற்கும் எல்லைகள் இரு ப்பது போல, "மாயைக்கும்" உண்டு. ஆனால், மனம் எங்கெல்லாம் பயணிக்கிறதோ, அங்கெல் லாம் மாயத்தின் தோற்றமும் விரிவடையு ம். மனதைப் பிடித்து தொழுவத்தில் கட்டி விட்டால், மாயையால் மேய்ச்சலுக்குப் போகமுடியாது.

No comments:

Post a Comment