Sunday 22 March 2015

சிந்தனை துளிகள் 4




################################
நம் பூமியின் காற்றுமண்டலத்தில், எங்கே குறைவான காற்றடுக்கு உள்ளதோ, அதை நிரப்புவதற்காக, ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு காற்று செல்கிறது.

எங்கே தேவையும், பற்றாக்குறையும் அதிகம் உள்ளதோ, அந்த திசைநோக்கி அதிவேகமாய், சூறைக்காற்றாகி சுழன்றடிக்கும். எந்த திசையில் சமன்பாடு குறைவோ, அங்கே தென்றலாகி சென்று மறையும்.
################################
உங்களின் மனதில்பட்டதை வெளிப்படையான பேசிவிடும் குணம் கொண்டவராக இருந்தால், இந்த உலகமெனும் நாடகமேடையில் நடிப்பதற்கு, இலாயக்கற்றவர்கள்.. ஒரு முகமூடிக்குப் பத்து முகமூடிகளை கைகளில் வைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள். தப்பில்லை.  காரணம், உங்களின் நிஜமுகம் இங்கு யாருக்கும் தேவையில்லை.
என்ன….. அறிவையும், மனதையும் முகமூடிகளாய் நினைத்து, அடிக்கடி கழட்ட வேண்டி வரும்.
###############################
எளிய மனிதனிதனிடம் பேசும்போது, இதயத்திலிருந்து பேசுங்கள். அவன் இறைவனாகக் கூட இருக்கலாம்.
அறிவை முன்னிறுத்தி, மனதை பின்னிழுத்து வைத்துப் பேசாதீர்கள். எங்கிருந்து வெளிப்படும் வார்த்தைகள் சத்தியமானது என்று அந்த இறைவனுக்கும் தெரியும்.   
#################################
நம் கைகளில் எதுவும் இல்லை என்பதற்காக, எதையும் தேடி வைக்காமல் இருக்கிறோமா? சந்ததிகள் வாழ, நம் நிம்மதியைத் தொலைத்துக் கொள்கிறோம். இப்படித்தா னே நம் முன்னோர்களும் நினைத்து இருப்பார்கள். பிறகு ஏன் நாம் நிம்மதியாய் வாழவில்லை.
சேர்த்து வைத்த சொத்துக்கும், நிம்மதிக்கும் தொடர்பில்லை.
################################
எல்லாம் அவன் செயல் என் றால், அவன் படைப்பில் நீ எதற்கு?
##################################
ஒவ்வொரு முறையும் அடுத்தவன் போட்டுவைத்த பாதையில், சொகுசாக செல்லவே விரும்புகிறான். தன் பயணத்தையோ, பாதையையோ தானே தீர்மானிப்பவன் வெற்றிபெறுவான். அவரவர் பாதையில்  அமைதியாக யாரும் பயணிப்பதே இல்லை.
################################
எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விடைகள், இதுதான் என்று எனக்கான கேள்விகளையும் தீர்மானித்து வைத்துள்ளேன். இதிலிருந்து மாற்றுச் சிந்தனைகள் வரும்போது, சிந்தனைகளைத்தான்எதிர்நோக்கவேண்டும். சிந்தித்தவரை அல்ல. 
##################################
பந்தய விளையாட்டில் ஆட்டத்திற்கு உள்ளே விளையாடிக் கொண்டிருப்பவனுக்கும், வெளியே வேடிக்கைப் பார்ப்பவனுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்கே, சுற்றி நிற்பவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, விளையாடுபவனுக்கில்லை.
##################################எவ்வளவு உயரமாக நிமிர்ந்து நின்றாலும், பூமியில் நிலைகொண்டு ஆகவேண்டும். புவியீர்ப்புக்குள் பணியாத எதுவும், அந்தரத்தில் அலைந்துதான் தீரவேண்டும்.
#################################

No comments:

Post a Comment