Saturday 14 March 2015

நான்குவிதமான மலடுகளுக்கான தோஷங்கள். 4, முத்துப்பிள்ளை.



3). ஸ்திரி வந்தியாம்:

மகரமோ, கடகமோ ஐந்தாமிடமாகி, அதில் குரு நீசமாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அது ஸ்திரீ வந்திய தோஷமாகும். மேலும், இதேவிடங்களில் சந்திரனும், சுக்கிரனும் இருந்தாலும் இந்த தோஷம் உண்டாகும். இலக்கினத்தில் இராகுவும், அதற்கு ஐந்தாமிடமான ஒஉத்திர ஸ்தானத்தில் குருவிருக்க, அதற்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிடத்தில் சனியிருக்க ஜாதகர்க்கு ஒரே புத்திரன்தான் இருப்பான்.

4). ஸாக்ஷாத் வந்தியா தோஷம்:

இலக்கினத்துக்கு ஐந்தாமிடம் புதன் அல்லது சனியின் வீடாக இருந்து, அதில் சனியும், மாந்தியும் கூடியிருந்தால், அல்லதுபார்வைப் பட்டால் புத்திரவர்க்கம் இல்லை. ஐந்தாமிடத்தில் பல பாவக்கிரகங்கள் கூடியிருந்தால் குழந்தைகள் இல்லை. புத்திர ஸ்தானாதிபதி நீச வர்க்கம் பெற்றால், குழந்தைகள் இல்லை. இலக்கினம், சந்திரன் மற்றும் குருவுக்கு ஐந்தாமிடத்தில் பாவக்கிரகங்கள் சூழ்ந்து இருந்தால், குழந்தைகள் இல்லை. ஐந்தாமதிபதி பாவக்கோள்களுடன் கூட ஸாக்ஷாத் வந்தியா தோஷம் ஆகும்.

இதுபோன்ற கிரக அமைப்புகளை அவயோக அமைப்பாகும். இவைகளை வந்தியை தோஷம் என்பார்கள்.   நன்றி.   

No comments:

Post a Comment