Friday 13 March 2015

இன்று ஜோதிடத் தகவல்களுடன் ஒரு கதை படிப்போமா?


1.   ஏழுக்குடையக் கிரகம் நல்லக் கிரகங்களின் மத்தியில் இருந்தால்மனைவியாக வாய்ப்பவள் நல்ல குணவதியாக இருப்பாள்.

2.   நவாம்ச லக்கினத்துக்கு ஏழில், குருசந்திரன் இருக்க, அவனின் மனைவி அழகுநிரம்பியவளாக இருப்பாள்.

3.   இலக்கினத்திற்கு நான்கிலோ, பத்திலோ ஏழாமதிபதி இருந்தால், அவனுக்கு வாய்க்கும் மனைவி பத்தினியாய் இருப்பாள்.

4.   இலக்கினத்திலும், ஏழாமிடத்திலும் பாவக் கிரகங்கள் இருந்தால், கணவன் மனைவியருக்குள் அடிக்கடி வம்பு வழக்குகள் வரும்.

5.   இலக்கினாதிபதியும், ஏழாமதிபதியும் ஒன்றுக்கொன்று பகை, நீசம் பெற்று இருக்கக் கூடாது.
ஜோதிடத் தகவல்களுடன் சின்னதாய் கதையையும் படிப்போமா?

புதுசா கல்யாண முடிச்ச சோடி ஒண்ணு, கோயிலிக்கு போயிக்கிட்டு இருந்துச்சுங்க. அப்ப, “ஐயோ கல்லுத் தட்டிடுச்சேன்னு”  வூட்டுக்காரி கத்துனா. அதுக்கு அந்த ஆம்படயான், “ கருமம் புடுச்ச கல்லே, நீ தட்டுறதுக்கு எம்ம பொண்டாட்டிதான் கிடச்சாளா, ஒன்ன…..” அப்புடின்னு அவ காலப்புடுச்சு தடவிக் குடுத்து, அந்த கல்லப் பொறுக்கி சாக்கடைக்குள்ள கடுப்புள்ள போட்டான். அதுக்குப் பொறகு கோயிலுக்குப் போயி சாமி கும்புட்டாக. இப்படியே ரொம்ப நாளாகிப் போச்சு.

ஒரு ரெண்டு, மூணு வருச கழிச்சு, ரெண்டுபேரும் சந்தக்கிப் போயிட்டு வர்ற வழியில, முன்ன மாதிரியே, ஒத்த கல்லு மேல கால எத்திக்கிட்டா, “ கல்லு எத்திடுச்சு மாமோய்ன்னு நொண்டிக்கிட்டே நடந்தா. அதுக்கு புருசங்காரன் சொன்னான், “அட எலவெடுத்த சிறுக்கி, கண்ண பொடணியிலயா வச்சுக்கிட்டு வர்ற, நடக்குற பாதயல அல்லாந்தான் கெடக்கும். நாமதான் பாத்து நடக்கணும்.” அப்புடீன்னு சொல்லிக்கிட்டு அவன்பாட்டுக்குப் போயிக்கிட்டு இருந்தான். அவ நொண்டியடிச்சிக்கிட்டு பின்னுக்கே வந்தா.


ஒருவரோடு பழகும் நீங்கள், முதல்நாள் என்னநிலையில் பேசத் துவங்குகிறீர்களோ, அதையே காலத்திற்கும் பயன்படுத்துங்கள். பிரிவினை என்பதே வராது.

No comments:

Post a Comment