Sunday 22 March 2015

சிந்தனை துளிகள் 2





###############################
ஜோதிடத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், "அஸ்ட்ரோ" என்று போட்டுக் கொள்வதைப் போல, வாழ்க்கையை வாழத்தெரியாமலே வாழ்ந்து முடித்துவிடுகிறோம்.
###############################
விடிந்ததில் இருந்து உறங்கப் போகும் வரை எத்தனை ஆணவக்குரல்களைக் கேட்டு விடுகிறோம். இதில் நம்முடையவை மட்டும் எத்தனை? இந்த ஆணவம் எங்கிருந்து வருகிறது. ஏன்? உனக்குப் பின்னே உள்ளவர் கோடி என்பதாலா?
##############################
சிறகுகள் முளைத்தும் பறக்க நினைக்காத சிறு பறவைக்கு, கூண்டே சிறைதான்.
ஒருநாள் வாழ்ந்தாலும் ஈசலைப் போல் வாழ்வோம்.
##############################
ஜோதிடம் என்பது பிரபஞ்சத்தை அளவிடும் அற்புதக்கருவியாகும். அது நம்மிடம் உள்ளது. அதைக் கொண்டு பதுப் பரிணாமத்தில் ஜோதிடத்தை அணுகுவோம்.
############################
இறைவனைக் கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்.
மனிதனைப் பயப்பட வைக்க, அவரென்ன பேயா? பிசாசா? அல்லது பூச்சாண்டியா?
#############################
நமக்கு எல்லாமே இலவசமாகவே இறைவன் தந்தான். ஆனால்,
நமக்குள் ஒவ்வொன்றையும் விலைகொடுத்தே வாங்கிக் கொள்கிறோம்.
##############################
ஒருவன் எத்தனை வெற்றிகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொண்டே இருக்கலாம்.
ஆனால், இதற்குமுன் பெற்ற தோல்விகளை மட்டும் மறந்துவிடக்கூடாது. மறந்தால், நிரந்தர தோல்வியாளனாக போய்விடுவான்.
##############################
நதியும் ஆறும் வளைந்து நெளிந்துதான் ஓடணும். அது நியதி.
#############################
மண்ணை வளப்படுத்தும் ஆற்றைப்போல, நம் வாழ்க்கையை ஒரு குறிக்கோளை நோக்கியே நகர்த்த வேண்டும்
################################

No comments:

Post a Comment