Friday 13 March 2015

இன்று ஒரு கதைப் படிப்போமா?


அந்த ஆற்றோரம் அமைந்த ஊரில் ஒருவன், பல ஞானியர்களிடமும், குருக்களிடமும், குருகுல வாசத்தை முடித்துவிட்டு,  தன் சொந்த ஊருக்கு வந்தான். தங்கள் ஊரின் குடகனாற்றின் கரையில், ஒரு ஞானி ஆசிரமம் வைத்து, தன் சீடர்களுக்குக் கலைகள் போதித்து வருவதை அறிந்தான்பல கலைகள் அறிந்தவர் என்பதை அறிந்து, அவரிடமிருக்கும் நுட்பமான கலைகளைக் கற்று, தம்மிடமுள்ள திறமைகளை வளர்த்துக் கொள்ள நினைத்தான்.  

ஒருநாள் அவரை சந்திக்கச் சென்று, இதுவரை தான் இருந்த குருகுலத்தைப் பற்றியும், தனக்குக் கலைகள் கற்றுத் தந்த    குருக்களைப் பற்றியும், கற்ற வித்தைகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி தன்னையும் தங்களின் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி, மிகவும் வணங்கிக் கேட்டான். அவனை மேலும் கீழுமாகப் பார்த்த குரு, நாளை வரும்படிக் கூறினார். அவனும் சீடனாகச் சேரப்போகிற மகிழ்ச்சியில் சென்றான். இரவு கழிந்து, விடிந்தது.

அவன் மீண்டும் குருவைச் சந்திக்கச் சென்றான். அன்றும் தான் கற்றுள்ள கலைகளைப் பற்றியே சொல்லி, தான் இதுவரை கல்லாத் களைகள் ஏதாவது இருந்தால் கற்றுத்தரும்படி சொன்னான். அன்றும் குரு அவனை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, மீண்டும் நாளை வருமாறு சொன்னார். அவனும் மனதுக்குள் முனுமுனுத்துக்கொண்டே செல்வதை குருவும் ஓரக்கண்ணால் கண்டார். இரவு கழிந்தது. விடிந்தது.

மீண்டும் ஆசிரமத்திற்கு செல்லும் போதே, இன்றைக்கும் என்ன சொல்லப்போகிறாரோ என எண்ணிக் கொண்டே சென்றான். அன்றும் தன் குருவின் பிரதாபங்களைச் சொல்லத் துவங்கி, அவர்களை விட தாங்கள் சிறந்தவர் அல்ல என்கிற தொனியில் பேசினான். அப்படியப்பட்டவர்களே தன்னை உடனே மாணவனாக ஏற்றுக் கொண்டதையும், தாங்கள் என்னை அலைய விடுகிறீர்கள் என்றும் கூறியே விட்டான். அன்றும் குரு அவனைப் பார்த்து, “நாளை வாருங்கள்என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவனும் சலித்த மனதுடன் செல்வதௌக் குருவும் கண்டார். இரவு கழிந்த்து. விடிந்தது.

தானியக் கிடங்கில் குரு இருப்பதாக, அவருடைய சீடர்கள் சொன்னார்கள். அவனும் அங்கு சென்றான்அங்கு கண்ட காட்சி, அவரிடம் மாணவனாக சேரலாமா? வேண்டாமா? என்கிற எண்ணத்தை உருவாக்கியது.  

அந்த தானியக் கிடங்கில், ஒரு அண்டாவில் தானியங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. கீழே குவித்து வைக்கப்பட்டிருந்த, தானியத்தை அந்த அண்டாவில் மேலும், மேலும் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார் குரு. அண்டா நிரம்பி இருந்ததால், அதில் கொட்டப்பட்ட தானியங்கள் வழிந்து கிழே கொட்டின. அவரோ மீண்டும் மீண்டும் அதில் அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தார். அது வழிந்தது. இப்போது தன்னிடம் பாடம் கற்க வந்துள்ள சீடனைப் பார்த்து, “நீரும் வந்து அள்ளிப் போடும், இந்த அண்டாவை நிரப்பி விடலாம். என்றார்.

நாம் இதுவரை, லூசுப்பயலிடமா பாடம் கற்க முயற்சி செய்து கொண்டுள்ளோம்.என எண்ணி, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ குருவே, இந்த அண்டாவோ நிரம்பி விட்டது. இதில் மேற்கொண்டு தானியங்களை நிரப்ப முடியாதே. அப்படியிருக்கும் போது, என்னையும் அள்ளிப் போடச் சொல்கிறீர்களே! என்றான். மீண்டும் குருகுருவின் வார்த்தைக்கு மதிப்பில்லாமல், எதிர்த்து பேசுவது தவறு என்று உனக்குத் தெரியாதா?” என்றார். அதற்கு அவன், “பல குருக்களிடம் கலைகளைக் கற்றவன் நான். நீங்கள் செய்யும் மூடத்தனமான வேலையை என்னால் செய்ய இயலாதுஎன்றான். அவனைப் பார்த்து குரு சொன்னார், “ ஆமாம். இது மூடத்தனமான வேலைதான். இந்த அண்டா தானியங்களால் நிரம்பி வழிவது போல,  உங்களின் மனம் சிந்தனை முழுக்க நல்லதோ, கெட்டதோ,  பல குருக்களின் மூலம் கற்ற கல்விதான் நிரம்பியிருக்கிறது. அப்படியிருக்கும் போது, புதிதாய் நான் சொல்லித் தருகிற எந்த கலையும் உங்கள் மனதில் நிற்காது. உங்கள் மனம் சிந்தனை, எண்ணங்கள் எப்போது வெறுமனே உள்ளதோ அப்போதுதான், எந்த கலையும் கற்க முடியும். அதனால், உங்கள் மனம் எனும்அண்டாவைவெறுமனே வைத்துக் கொண்து வாருங்கள்என்று சொல்லி குரு அவனை அனுப்பி வைத்தார்.

நாம்தான் அனைத்தையும் கற்றுக்கொண்டு விட்டோமே, இனி இந்த முகநூலில் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று எண்ணாமல், மனதை வெறுமனே வைத்துக் கொண்டு, கற்றுக் கொள்ளத் தயார்படுத்தி வாருங்கள்.  நன்றி  


No comments:

Post a Comment