Monday 6 April 2015

எட்டைத் தொட்டால் எல்லாம் கருகும். பாகம். 5.





இந்த எட்டாமிடம் என்பது காலபுருடனின் ஆயுளைக் குறிக்குமிடமாக இருப்பதால் செவ்வாயையும், ஆயுளின் காரகனான சனியும் ஒன்றையொன்று கெட்ட இடங்களில் தொடர்பு கொள்ள, ஆயுளுக்குக் கேடாகும். இப்போது, இலக்கினத்திற்கு பனிரெண்டில் செவ்வாயும், ஆயுள்வீட்டில் சனியும் இருக்க, ஜாதகர் துர்மரணம் அடைய வாட்ப்புள்ளது. ஒரு விபத்து நடக்கிறது என்றால், சனி, செவ்வாய் தொடர்பு அவசியம் இருக்கும். அதை தவிர்ப்பது நல்லது. இது அனுபவப்பூர்வ உண்மை. சனிக்கிழமையில் வரும், செவ்வாய் ஓரையிலோ, அல்லது செவ்வாய் கிழமையில் வரும் சனி ஓரையிலோ, பயணம் துவங்குவதைத் தவிர்க்கவும்.

இலக்கினத்திற்கு எட்டாமிடத்தினில் நல்ல கிரகங்கள் இருந்தால், படுக்கையிலே உறங்கும் போதே உயிர்பிரியும். இந்த அமைப்பு அட்டமாதிபதி சுபக்கிரகங்கள் சூழ இருந்தாலும் அப்படியே தான் நடக்கும்.

இலக்கினாதிபதி பாவக்கிரகங்களுடன் கூடி இருந்தாலோ, அல்லது இலக்கினத்தில் பாவக்கிரகங்கள் பரவிக்கிடந்தாலோ, ஜாதகரின் உயிர் வதைபட்டுத்தான் பிரியும்.

இலக்கினத்திற்கு நான்காம் வீட்டின் அதிபதியான சுகாதிபதியும், பில்லிசூன்ய ஏவல், கட்டு இவைகளுக்குச் சொந்தக்காரனான கேதுவும், நோய்களைக் குறிக்கும் ஆறாமிடத்தினில் அமர, ஆயுதத்தாலோ, உன்மத்த நிலை கொண்டோ உயிர்பிரியும்.

No comments:

Post a Comment