Monday 6 April 2015

எட்டைத் தொட்டால் எல்லாம் கருகும். பாகம். 4.





காலபுருடனின் எட்டாமிடம் என்பது, ஆயுளை மட்டும் குறிப்பதில்லை. அதற்கு பல காரகங்கள் உண்டு என்று, முதல் கட்டுரையிலே, எட்டாமிடத்திற்கானக் காரகங்களைத் தொகுத்து வழங்கினேன். காலபுருடனின் உடற் கூறுகளில், இந்த இடம், ஆண்,பெண் இருபாலருக்கான பிறப்புறுப்புகளைக் குறிக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலமற்று, ஆறு, எட்டாமிடங்களில் இருக்க, ஆறு, எட்டாமிட அதிபதிகளில் ஒருவருடன் சனி தொடர்பு கொண்டு இருந்தால், அந்த ஜாதகன் மிதமிஞ்சிய போகத்தினால் பலமற்று மரணமடைவான். இவர்கள் வசியமருந்தால் பாதிக்கப்பட்டு இறப்பார்கள்.

ஆணுக்கோ, பொண்ணுக்கோ வீரியத்தையும், தெம்பைத் தரும் மூன்றாமதிபதியும், கணவனையோ, மனைவியையோ தரும் ஏழாமதிபதியும் தொடர்பு கொண்டு விரையஸ்தானத்தில் இருக்க, அதிகப்படியான வீரியத்தையும், சக்தியையும் இழந்து பலமற்றவனாய் போவான்.

சுக்கிரனும் பிறப்புறுப்பிற்கு உரியவனான எட்டாமதிபதியும் கூடி, ஆறாமிடத்தில் இருக்க, அதிகப்படியான போகத்தால் உடல்பலமற்றுப் போவான்.

இதைத்தான் காலப்புருடனின் பிறப்புறுப்புக் காரகனான எட்டாமதிபதி செவ்வாயும், காலபுருடனின் மனைவியைக் குறிக்கும் ஏழாமதிபதி சுக்கிரனும், வீரியஸ்தானத்திலும், நோயைக் குறிக்கும் ஆறாமிடத்திலும், மறைவிட  உடலுறுப்புகள் பழுதைக் குறிக்கும் எட்டாமிடத்திலும், மற்றும் படுக்கை உறக்கத்தைக் குறிக்கும் பனிரெண்டாமிடத்திலும் கூடக்கூடாது. அவர்கள்அதீத உடல் இன்பப் பிரியர்களாகஇருப்பார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் எட்டாமதிபதியும், ஏழாமதியும் கூடுவதோ, காண்பதோ மற்றும் சாரம் வழங்கிக் கொள்வதோ கூடாது. இது போன்ற அமைப்பில் இருந்தால், அவர்கள், “செக்ஸ் வெறியராகஇருப்பார்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment