Monday 6 April 2015

எட்டைத் தொட்டால் எல்லாம் கருகும். பாகம். 3.





நம்மில் பலருக்கு வாயுத் தொல்லை இருக்கும். அதனால், மூச்சுப்பிடிப்பும், வாயு பிரியாமல் கடும் அவஸ்தைப் படுவதையும் கண்டுள்ளோம். இதற்கான காரணங்கள் ஏதென்று சிந்திக்கும் போது, இராசியை நான்கு பூதங்களாய் நம் முன்னோர்கள் பிரித்து இருப்பதைக் காண்பீர்கள். அது என்னவென்றால்,

நெருப்பு இராசிகள்.
மேடம், சிம்மம், தனுசு எனும் கிழக்குராசிகள் அனைத்தும் நெருப்பு ராசிகளாகும்.

நிலராசிகள்.
இரிடம், கன்னி, மகரம் எனும் தெற்குராசிகள் அனைத்தும் நிலராசிகளாகும்.

காற்று ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் எனும் மேற்கு ராசிகள் அனைத்தும் காற்றுராசிகளாகும்.

நீர்ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் எனும் வடக்குராசிகள் அனைத்தும் நீர்ராசிகளாகும்.
இப்போது காற்றுக் கிரகங்களான, புதன், சுக்கிரன், சனி ஆகியவைக் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, வாயுத் தொல்லையால் ஜாதகர் பாதிக்கப்படுவார்.

ஆயுள்ஸ்தானாதிபதியானவன் நோய்களைக் குறிக்கும் ஆறாமிடத்தில் அமர்ந்திருக்க, ஜாதகரைக் குறிக்கும் இலக்கினாதிபதியும், ஆறாமதிபதியும் மேற்கூறிய காற்றுக் கிரகங்களில் ஏதோவொருக் கிரகத்துடன்  கூடி எட்டில் அமர்ந்திருக்க, ஜாதகனுக்கு வாயுவால் தொல்லை ஏற்படும்.

ஒன்று, ஆறு, எட்டு இம்மூன்று அதிபதிகளுடன், புதன், சுக்கிரன், சனி ஆகிய மூன்றுக் கிரகங்களில் ஒன்று ஏதேனும் ஒருவகையில், ஆறு, எட்டாமிடங்களில் தொடர்பு கொண்டால் வாயுத் தொல்லை இருக்கும்.

அண்டவாயு, பக்கவாயு, ஓரண்டவாயு, மற்றும் கர்ப்பவாயு என உள்ளன. இதிலொன்று ஜாதகர்க்குப் பாதிப்பைத் தரும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.   

No comments:

Post a Comment