Friday, 7 August 2015

இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




98.

இப்போதும் நம்மில் சிலர் “தன்னுடைய மொழிப் புலமையின் மேல் சந்தேகப் படுகிறார்கள்” என கூப்பாடு போட்டதை, முகநூலின் வாயிலாக அறிந்தோம். இந்த மொழியின் மேல் எல்லோருக்கும் பற்றுதல் இருக்கத்தான் செய்கிறது. இதில் சிலருக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும். இது தொடர்பாக பலவிதிகள் இருந்தாலும், ஒன்றை மட்டும் பார்போம்.

இலக்கினத்திற்கு இரண்டில் இரண்டுக்குடையோனும், புதனும் கூடியிருக்க, இரண்டில் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெறவும், முழுச் சுபக்கிரகமான குரு, இலக்கினத்தில் இருந்தாலும், அல்லது வேறெங்கோ அமர்ந்து இலக்கினத்தைப் பார்த்தாலும், ஜாதகர் தமிழ்மொழிமேல் தீராப்பற்று கொண்டவராக இருப்பார் எம்கிற தகவலுடன், …

99.
நாம் பல்வேறுபட்ட மனிதர்களுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அவர்களின் சிந்தையும், செயலும் கூட, நிமிடத்திற்கு நிமிடம் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. நாணயமிக்கவனாகக் காட்டிக் கொள்ளுபவன், சற்று நேரத்திலே, குறுக்குச் சிந்தனையும், கோணல் புத்தியும் உள்ளவனாக மாறிவிடுகிறான். இதற்கெல்லாம் காரணம்,

இலக்கினத்திற்கு இரண்டுக்கு உடையவனும், நான்குக்குடையவனும்  பகை நீசம் பெற்றிருக்க, அவர்களை எட்டுக்குடையக்கோள் பார்க்க, ஜாதகன் துர்புத்தியும், துர்பேச்சும் கொண்டவனாக இருப்பான் என்கிற தகவலுடன் உங்கள் 

100. 

இது விஷேசமான நூறாம் நாள் பதிவு. அதனால், சில விதிகளைப் பார்ப்போம். 

மூன்றுக்குரியவரும், இலக்கினாதிபதியும் பரிவர்த்தனைப் பெற, குரு காண எமனுக்கும் அஞ்சா வீரனாக இருப்பான்.

இலக்கினத்தில் இரண்டு, நான்குக்கு உரியவர்கள் கூட, பெரும் கல்விமான்.

சந்திரனுக்கு மூன்றுக்குரியவர் உச்சம் பெற, உச்சம் பெற்ற வீட்டுக்குரியவர் ஐந்தில் நிற்க, முன் ஜென்மத்தில் புண்ணியங்கள் பல செய்தவர்.

இலக்கினத்திற்கு நான்கில் செவ்வாய் ஆட்சி பெறவும், அவரை குரு நட்பு வீட்டில் இருந்து காண, எதிரிகள் கதிகலங்கிப் போவார்கள்.

சந்திரனுக்கு  மூன்றில் ஒன்பதுக்குரியவர் நிற்க, எட்டுத்திக்கும் புகழ் பரவி நிற்கும் என்கிற தகவல்களுடன், உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம் . 

இத்துடன் காலைப் பதிவு நிறைவு பெறுகிறது. நன்றி. வணக்கம்.

91501 06069

No comments:

Post a Comment