Friday 7 August 2015

இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




93.

நம்மில் பலரும் இல்லறவாழ்வை விரும்புவதைப்போல, துறவறத்தையும் அதிகம் விரும்புகின்றனர். சிலர் இல்லறத்தில் இருக்கும்போதே, துறவறசிந்தனையோடு வாழ்வதைப் போல, துறவறத்தில் இருந்தவர்களும் இல்லறத்தை விரும்பி நுழைவதும் உண்டு.

இலக்கினத்திற்கு ஏழாம் வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்து, வீரிய ஸ்தானமான மூன்றினில் சுபக்கிரகங்கள் இருந்தால், துறவறவாழ்வை விரும்புவார். ஜாதகி என்பவர் இலக்கினம் என்கிற ஒன்றைக் குறிக்கும் போது, மூன்றாமிடமும், ஏழாமிடமும் ஒன்றுக்கொன்று ஐந்து, ஒன்பதாக வரும். இது ஆன்மீகத்தை சொல்லும் இடங்களாகும் என்கிற தகவலுடன், உங்கள் … 

94. 


பொருள் இல்லாதவர்களுக்கு, இவ்வுலகம் இல்லை. அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகமில்லை. ஆனால், அருளும், பொருளும் இல்லாதவர்களுக்கு, எவ்வுலகமும் இல்லை என்பார்கள். இன்னும் சொல்லப்போனால், காசில்லாதவன் கணவனே ஆனாலும் கதவை சாத்தடி என்றும் சொல்வார்கள். இன்னும்கூட  பணமில்லாதவன், பிணத்திற்குச் சமம், என்று முடிவே செய்து விடுவார்கள்.

இலக்கினத்திலும், தொழிஸ்றதானமான பத்தாம் வீட்டிலும் சுபக்கிரகங்கள் இருக்கவேண்டும். ஒன்று, பத்தாமதிபதிகள் சுபக்கிரகத்துடன் கூடி இருக்கவேண்டும். ஒன்று, பத்தாமதிபதிகள் பரிவர்த்தனை பெற வேண்டும், இந்த அமைப்புடன் பிறந்தவர்கள் தொழில் மேன்மை அடைவார்கள் என்ற தகவலுடன், உங்கள் …   

95. 

எல்லோரும் வெளிப்படைத் தன்மையாய் வாழும் போது, நம்மில் சிலர் மட்டும் பொய்யுரை செய்து வாதம் செய்வர். மறைவான வார்த்தைகளும், தன்னை பெரிதுபடுத்திக் காட்டும் தன்மையும் நகைப்புத் தரும்.

இலக்கினத்திற்கு இரண்டு, ஏழுக்குடையவர்கள் ஆறாமிடத்தில் இருக்கவும், ஐந்து, ஆறுக்குடையவர்கள் இரண்டில் நிற்கவும் உள்ள ஜாதகர்கள் பொய் பேசித் திரிவார்கள். இந்த ஐந்துக்கிரகங்களும் ஒன்றையொன்றாக, இரண்டு, ஐந்து, ஆறு, ஏழில் தொடர்பு பெற்றாலும் இதே பலன்களே என்கிற தகவலுடன், உங்கள் …

91501 06069

No comments:

Post a Comment