Friday 7 August 2015

சித்தனும் யோகியும் யார்?





பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப் பாடல்கள்; 9


விற்பெரும் உயிரோனும் இந்த ராசிக்குடையோனும்
வேதாந்த பத்துக்குடையோனும் கூடி
கூடியே ஓர்ராசியில் இருக்கவையா
நாடியே வெகுகாலம் இறவாமல் முக்தி
நாதன் எனப் பெற்றிருப்பான் நன்மைதானே.
இலக்கினத்தின் அதிபதியும், இராசியில்
அதிபதியும், பத்துக்குடையோனும் கூடி ஒருராசியில் இருக்க, இந்த ஜாதகனானவன் சித்தனாக வாழ்வான். இவன் வெகுகாலம் இறவாமல் முக்திநாதன் எனப் பெயரும் எடுப்பான்.

சித்தனும் யோகியும் யார்?
பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப் பாடல்கள்; 10


நீடியே உயிரோனும் எட்டோன் ஒரு ராசில்
நிற்க அவருடன் செவ்வாய் இருக்கப் பார்க்க
வாடிய அவ்வீடு பகைவீடாக இருக்க,
மனுஷரைக் கொல்கிற வித்தை கற்பான் பாரே.

இலக்கினத்தின் அதிபதியும், எட்டாமிடத்தின் அதிபதியும் கூடி ஒரு ராசியில் இருக்க, அவருடன் செவ்வாய் கூடி இருக்க, அல்லது பார்க்க, இவர்கள் நின்ற ராசி பகை ராசியாக இருக்க, மனுஷரைக் கொல்லும் வித்தைகள் கற்பான்.

சித்தனும் யோகியும் யார்?
பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப் பாடல்கள்; 11


பாரே இராசிக்கு நாலோன் ஏழோன்
பண்புடனே ஓரிடத்தில் இருக்க அவர் சுபராய்
தேரே அல்லது பார்க்க பில்லிசூனிய வைப்பு
நிலையுடன் எடுத்தெரிய வல்லவன் ஆவானாய்

இராசிக்கு நான்கோனும் ஏழோனும் கூடி ஒரு ராசியில் இருக்க, அவர்களை சுபக்கிரகங்கள் பார்க்க, ஜாதகனானவன் பில்லி, சூன்ய, வைப்புக் கலைகளைக் கற்பான்.

No comments:

Post a Comment