Tuesday 4 August 2015

சித்தனும் யோகியும் யார்? 5




பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப் பாடல்கள்; 5


நாடும் இரண்டுக்குடையோனும் நாலுக்குடையோனும்
உடையவர்கள் நட்பாட்சி ராசியிலே இருக்க
உகந்து புதன் பார்க்க அல்லது சேர்ந்திருக்க
நடமாடும் சிவனருளும் நாதோன்
நாதாந்த மவுனரிஷி அருளினாலும்
குடதிசையோன் அருளாளும் கோபாலன்தன் குலாசலத்தின் மூலிகையும் மந்திரமும் கற்று
திடமலனுக்கே சொன்ன ரசவாத மற்றும்
தேடியவன் கைகூடும் சொன்னேன் பிசகிலையே.
இலக்கினத்திற்கு இரண்டுக்குடையோனும், நான்குக்குடையோனும், தங்களின் ஆட்சி மற்றும் நட்பு பெறும் வீடுகளில் அமர்ந்திருக்க, முக்காலமும் உணர்ந்த சிவபெருமானின் பேரருளாலும், முனிவர்கள், பரம்பொருளின் அருள்பெற்ற மவுன ரிஷிகளின் அருளினாலும், மேற்குதிசையில் வீற்றிருப்போன் அருளாலும், குலாசல எனும் குலமலையின் வீற்றிருருக்கும் கண்ணனின் பேரருளாலும் ஜாதகனுக்கு மூலிகைகளும்ம், மந்திரங்களும் கற்று, ரசவாதமும் கைகூடும் என்பது பிசகாகாது.


சித்தனும் யோகியும் யார்?

பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப் பாடல்கள்; 6


இல்லையவருடன் பானு கூடியிருக்கவையா
இணையில்லா உத்தம தேவைதை பூசிப்பான்
நல்லதவருடன் ராகு கூடியிருக்க
நாரணனோடு அரன் பூசை புரிந்து தெரிசிப்பான்
நான் முன் பாடலின் தொடர்ச்சியாக பார்க்கவும். முன்பு இலக்கினத்திற்கு இரண்டுக்குடையோனும், நான்குக்குடையோனும், தங்களின் ஆட்சி மற்றும் நட்பு பெறும் வீடுகளில் அமர்ந்திருக்க, இவர்களுடன் சூரியன் கூடியிருக்க, உத்தம தேவதையை பூசிப்பான். மேலும், இவர்களுடன் இராகு கூடியிருக்க, நாரணனோடு அரன் பூசையும் செய்வான்.

சித்தனும் யோகியும் யார்?

பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப் பாடல்கள்; 7


(முன்பாடல் தொடர்ச்சி)
தொல்லையில்லை செவ்வாய்க்கு குட்டிச்ச்சாத்தி வித்தை
செய்வனடா சனிகூடில் பில்லிசூனிய வித்தை
அல்லதவருடன் கேது குளிய நேரிடினும்
அப்பனே ஏவல் வஞ்சனைகள் கற்பான்.

இலக்கினத்திற்கு இரண்டுக்குடையோனும், நான்குக்குடையோனும், தங்களின் ஆட்சி மற்றும் நட்பு பெறும் வீடுகளில் கூடி அமர்ந்திருக்க, செவ்வாய் கூட குட்டிச் சாத்தான் வித்தை கற்பான். சனி கூடில், பில்லி சூனிய வித்தைக் கற்பான். மேலும், இவர்களுடன் கேதுவோ, குளிகனோ கூட, ஏவல் எனும் வஞ்சனைகள் கற்பான்.

No comments:

Post a Comment