Thursday 28 May 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்…..1





1985ம் ஆண்டு முதன்முதலில் என்னுடைய “மன்னிப்பு” என்கிற சிறுகதை வெளிவந்தது. அப்போது, நான் புனைப்பெயரில் எழுதிவந்தேன். அதுவரையிலும் வெற்றியடையாத நான், முதன்முதலில், “முத்துப்பிள்ளை” என்கிற எனது தந்தையாரின் பெயரில் எழுதினேன். அந்த கதை வெளியிடப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். எனது தந்தையாரும் மகிழ்ந்தார். அதன்பின் என் காதலியின் நினைவாக வைத்துக் கொண்ட, “சாரதாசன்” என்கிறப் பெயரில் எழுதினேன். இந்த பெயரில் நான் எழுதிய நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இன்றும் பலர் இந்த பெயரில் அழைப்பவர்கள் உண்டு. ஆனாலும், வெளியுலகத்திற்கு தெரியாமலே போனது. எழுத்துலகில் சாரதாசன் என்கிறப் பெயரால், மீண்டும் சறுக்கல். அந்த காலகட்டத்திலே 1989ம் ஆண்டே ஜோதிடத்துறையில் கால் பதித்துவிட்டோம். ஆனால், அதில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஏன் இப்போது வரையிலும் அப்படித்தான்.  பலமுறை வெளியிடங்களில் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்களை சந்தித்திருந்தாலும்,   என் இளமைக்கால நண்பர் திரு. ஜோதிவேல் அவர்களின் அழைப்பின் பேரில் 04. 04. 2001 ம் வருடம் திரு மீனாட்சி சுந்தரம் அவர்களை முதன் முதலில் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். எழுத்துலகில் என் சறுக்கல்களைப் பற்றிப் பேச்சு வந்தது. நானும், நண்பர் அவர்களும் சொன்னோம். அப்போது, பிரமீடு வழியில் அந்த பெயர்களை ஆய்வு செய்த அவர்,” சாரதாசன் “என்கிற பெயரைத் தவிர்க்குமாறு ஆலோசனைகள் கூறினார். பின் வேறு பெயரைச் சொல்லச் சொன்னார். நான், “ முத்துப்பிள்ளை “ என்கிற பெயரைப் பயன்படுத்திய பின் சிறுகதை வெளிவந்ததைச் சொன்னேன். அந்த பெயரை பிரமீடுகள் வழியில் ஆய்வு செய்தார்.  இந்த “ முத்துப்பிள்ளை “ என்கிற பெயரால், புகழ் பெறுவீர்கள் என்று சொன்னார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், 2001 ம் வருடம் துவங்கியதில் இருந்தே, என் மனைவிக்கு புதுவருட சபதமாக, “ஜோதிடம் பார்ப்பதில்லை, கதை, கட்டுரைகள் எழுதுவதில்லை “ என்கிற சத்தியத்தை வழங்கி இருந்தேன். அதன்படி நடக்கத் துவங்கிவிட்டேன். அதனால், அன்று திரு. மீனாட்சி சுந்தரமும், நண்பர் ஜோதிவேலும் என் பரிதாபக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்ட நண்பர்கள். எழுதுவதில்லை என்கிற எனக்கு, “முத்துப்பிள்ளையும், சாரதாசனும்” ஒன்றுதான். நன்றி. 



இதற்கடுத்தும் எழுதலாமா? என்பதை கமெண்டில் தெரிவியுங்கள். இங்கு குறிப்பிடுபவை என் மனதில் ஓசைகள். நன்றி என் முகநூல் உறவுகளே!!!.

No comments:

Post a Comment