Thursday 28 May 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...4





சென்னையில் இயங்கி வரும் “வா” என ஆரம்பித்து, மூன்றே எழுத்தில் முடியும், ஒரு பிரபலமான பதிப்பகத்தில் இருந்து வேலை ஒன்றை, திரு. ஐயர் இராமனுக்கு அவரது அண்ணன், இராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், இந்த வேலையில் தான் இணைவதைவிட, சினிமாத்துறையில் நுழைய முயற்சிக்கும் உனக்கே பொருத்தமானது என்று கூறிய இராமன், அந்தவேலையை எனக்கு வாங்கித் தர முயற்சி செய்தார். இருவரும் சென்னைக்குப் பயணப்பட்டோம். அதற்கான ஆண்டு 1991 அகும். அப்போது சென்னை மேற்கு அண்ணாநகரில் ஒருவீட்டில் என் நண்பர். திரு. மூர்த்தி என்பவர் தங்கி IAS தேர்வுக்குப் படித்து வந்தார். முதலில் அவரை சந்தித்தோம். எங்களைப் பார்த்த அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். வந்த நோக்கத்தை விளக்கினோம்.

அதற்கு அவர், “அங்கே வேலை கிடைத்ததும், சம்பளத்தைப் பற்றிக் கவலைவேண்டாம். ஒரு வேளை உணவு நான் தந்துவிடுகிறேன். இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள். மற்ற இரண்டு வேளை உணவைமட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.  அந்த வெளிப்படையான பதில் எனக்குப் பிடித்திருந்தது. வா… பதிப்பக அதிபர் திரு. திரு……….. அவர்களை மாலையில் சந்தித்தோம். நாங்கள் வேலை கேட்டு வந்த எல்லா விபரங்களையும் கேட்டறிந்தார். இராமகிருஷ்ணன் அவர்களின் சிபாரிசு கடிதத்தையும் பார்த்து முடித்தார். வேலை தருவதாக சம்மதித்தார். சம்பளம் 900.00 ரூபாய். தங்குமிடம் தரமுடியாது. நீங்கள் வெளியில் தங்கிக் கொள்ளவேண்டியது. என்ற கட்டளைகள் இட்டார். எல்லாவற்றிற்கும் சம்மதித்தோம். காரணம், என் நண்பன் பா. மூர்த்தி கொடுத்த தன்னம்பிக்கை வர்கள்தான் நினைவுக்கு வந்தது. அதனால், ஒத்துக் கொண்டோம். நாங்கள் கிளம்பத் தயாராகிக் கொண்டு இருந்த போது, திடீரென அழைத்தார் திரு. திரு….. அவர்கள் “உங்களை எப்படி நம்புவது” என்றார். இந்த ஒற்றை வரிகளில் தரித்திரம் தாண்டவமாடத் துவங்கிவிட்டதை உணர்ந்தேன். “என்னைப் பற்றி சொல்வதற்குத்தான் இந்த சிபாரிசு கடிதம் “என்றேன். “இல்ல தம்பி, நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவனுக்குத்தான் இந்த வேலையை தருவதாக சொல்லியிருந்தேன். “ என்றார். “சரிங்க ஐயா அப்படியானால், இவர் பிராமணர்தான் இவர்க்கு கொடுங்கள் எனக்கு வேண்டாம்” என்றேன். உடனே என் நண்பர், இராமன், “ இவரிடம் வேலை பார்க்க எனக்கு இஷ்டமில்லை “என்று கூறி, என்னை அழைத்து வந்துவிட்டார். இதே நிலைதான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், 



என் நண்பர் பா. மூர்த்தி உதவி காவல்துறை மாவட்ட அதிகாரியாகி, அதன்பின் தன் திறமையால், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றினார். இப்போது கோவை சிறப்பு அதிரடிப்படையில் காவல் துறை அதிகாரியாக உள்ளார்.
அவர் காவல்துறையில் இருப்பதால் என் நண்பர் அல்ல, இளமைக்காலத்தில்   எங்களொடு இருந்தவர், நேர்மையான அதிகாரியாக உள்ளார் என்பதே எங்களுக்குப் பெருமை. அதேபோல், தனக்குக் கிடைத்த வாழ்வைக்கூட, தரத் துணியும் நண்பர்களுடனும் வாழ்ந்துள்ளேன். நன்றி…..

தொடர்புக்கு…. 9751822129  8754873378

No comments:

Post a Comment