Thursday 28 May 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...3






இவர் என் நண்பர். பெயர் இராமசுப்பிரமணியன். வைதீகப் பிராமண வகுப்பில் பிறந்தவர். இவர் 1983ல் இருந்து இன்றுவரை மிக நெருங்கிய நண்பர். அவர்களின் வைதீக நெறிகளை, இவர்க்கே உரித்தான கேள்வி கேட்கும் திறனால், அக்ரஹாரமே வெறுத்து ஒதுக்கியது. அதே காலகட்டத்தில் கிறித்துவ மதத்தைச்சேர்ந்த நானும், குருக்களிடமும், கன்னிகாஸ்திரிகளிடமும் பகுத்தறிவுக் கேள்விகளைக் கேட்டதால், நானும் கண்டிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப் பட்டேன். என்னாலும் கிறித்துவமதத்துக்குள் இருக்கமுடியவில்லை. அங்கே வைதீகநெறிகளால் இராமன் துன்பப்பட, இங்கே கிறித்துவனான ஜான் துன்பப்பட்டேன். அப்போது, தமிழ்சங்கக் கட்டிடத்தில் இயங்கிவந்த நூலகம், எனக்கும், ஐயர் ராமன் என்றழைக்கப்படும் என் நண்பனையும் இணைத்தது. முதன்முதலில்  நூலகத்தில் என் கைகளில் சிக்கிய புத்தகம்,” மஞ்சை வசந்தன் “ எழுதிய, “அர்த்தமற்ற இந்துமதம் “ என்கிற நூல்தான். இதில் நூலாசிரியர், இந்து, கிறித்துவ, இசுலாம் மார்க்கங்களில் கேள்விகளையும் விஞ்ஞான விளக்கங்களுடன் விளக்கி இருப்பார். அவர் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை கூறுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவுறுத்தி இருந்தார். அந்த சவால் இன்றும் உள்ளது.

நானும், ஐயர் இராமன், மற்றும் இராமமூர்த்தி, கஜேந்திரன், முருகன் இன்னும் சிலரோடு இரவில் கடைகளில்அமர்ந்து, பகுத்தறிவு வாதம் பேசிக்கொண்டிருப்போம். வெகுவிரைவில் என் கேள்விகளுக்கு, அவர்களால் பதிலளிக்க முடியாது. ஒரு சிலவேளைகளில் பகுத்தறிவுவாதிகள் எங்களிடம் வந்து, கடவுள் மறுப்புக் கொள்கைப் பற்றிப் பேசுவார்கள். அவர்களின் கருத்துக்களை உடைக்க நான், ஆத்திகவாதியாக மாறி பேச்சுப்போரை முன்நடத்திச் செல்வேன். என்  நண்பர்களுக்கே குழப்பமாகி போவார்கள். அவர்களிடம், “ எந்த காலசூழலிலும் என் நண்பர்கள் என் முன்னால் தோற்றுப் போகக் கூடாது” என்பேன். இப்போது கூட, நூலகத்தைப் படம் பிடிக்கச் சென்றேன். நூலகம் அருகே “ கடவுள் மறுப்பாளர்களின் பொதுக்கூட்டம் ” நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப்போகிறேன். வருகிறேன்.   


தொடர்புக்கு….9751822129  8754873378
  

No comments:

Post a Comment