Thursday 22 January 2015

தசவர்க்கக் கணிதமும், அங்கீசப் பலன் அறிதலும்…. முத்துப்பிள்ளை.


ஒரு கிரகத்தை பத்துவிதமான கணிதமுறையில் தான், அதன் பலம், மற்றும் பலவீனத்தைக் காணமுடியும். நமது பார்வைக்கு ஒரு கிரகம் உச்சம் பெற்று இருந்தால், நாம் அதை உடனே உச்சநிலையில் உள்ளதாகவே நினைக்கிறோம். அது ஒரு கணித முறை. இதேபோல் இன்னும் ஒன்பது வகையான கணிதமுறைகளைக் கொண்டே, ஒரு கிரகம் உச்சம் பெற்றதா? இல்லையா? என்பதை அறியமுடியும். இதற்கு பத்துவிதமான கணிதமுறைகளைப் போடத் தெரிந்திருந்து இருக்கவேண்டும்.  

ஜாதகப் பலன்களை அறிவதற்கு பல வழிகள் உள்ளன. அதில், இந்த தசவர்க்க வழி என்பது மிக துல்லியமானதாகும்.ஒரு கிரகம் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தாலும், தசவர்க்க்க் கணித்த்தில் பலம் குறைவாக இருந்தால், நற்பலன் எதுவும் நடக்காது. மேலோட்டமாகப் பார்க்கும் போது, சரியில்லாத நிலையில் இருக்கும் கிரகம், தசவர்க்க்க் கணித்த்தில் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுவிட்டால், அக்கிரகம் நற்பலன்களை வாரி வழங்கும். ஆதலால், எந்தவொரு ஜாதகத்திற்கும் தசவர்க்கக் கணிதம் மூலமே கிரகப் பலத்தைத் தீர்மானிக்கவேண்டும்

1. இராசி 2.  ஓரை 3. திரேக்காணம் 4. திரிசாம்சம். 5. சப்தாம்சம் 6. நவாம்சம் 7. தசாம்சம் 8. துவாதசாம்சம் 9. ஷோடசாம்சம் 10. ஷஷ்டியாம்சம். இதுதான் ஒரு கிரகம் அங்கிசம் அறியப்பயன்படும் பத்துவிதமான கணித முறைகளாகும்.

இந்த தசவர்க்கங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகமும், உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, வர்க்கோத்தம், நட்பு, ஆகிய சுப அம்சம்களில் இருந்தால், ஒவ்வொரு கிரகமும், இந்த பத்து வர்க்கங்களிலும் எத்தனை சுப வர்க்கம் பெற்றுள்ளது என்பதைக் கண்டு,

                                                அங்கீசம்


ஒரு கிரகம் சுபவர்க்கம் பெற்றால்
 நிஷ்பலம்

ஒரு கிரகம் இருசுபவர்க்கம் பெற்றால்
 பாரிதாசாங்கிஷம்

ஒருகிரகம் மூன்று சுபவர்க்கம் பெற்றால்
 உத்தமாங்கிஷம்

ஒரு கிரகம் நான்கு சுபவர்க்கம் பெற்றால்
கோபுராங்கிஷம்

ஒரு கிரகம் ஐந்து சுபவர்க்கம் பெற்றால்
 சிங்காசனாங்கிஷம்

ஒரு கிரகம் ஆறு சுபவர்க்கம் பெற்றால்  
பாராவதாங்கிஷம்

ஒரு கிரகம் ஏழு சுபவர்க்கம் பெற்றால்
தேவலோகாங்கிஷம்

ஒரு கிரகம் எட்டு சுபவர்க்கம் பெற்றால்
வைசேஷிகாங்கிஷம்

ஒரு கிரகம் ஒன்பது சுபவர்க்கம் பெற்றால்  
 ஐராவதாங்கிஷம்

ஒரு கிரகம் பத்து சுபவர்க்கம் பெற்றால்
தேவேந்திராங்கிஷம்


 இதற்கானப் பலன்கள்.

1
நிஷ்பலம்     
நற்பலனும்,

2
பாரிதாசாங்கிஷம் -
நற்குணம், தனம், சுகம், பெருமை

3
உத்தமாங்கிஷம்
நல்லொழுக்கம், நிபுணத்துவம்

4
கோபுராங்கிஷம்
பூமி, வீடு, வாகனம், தனம், நன்னோக்கம்

5
சிங்காசனாங்கிஷம்
செல்வம், அதிகாரம், இராஜசன்மானம்

6
பாராவதாங்கிஷம்
வித்தை, செல்வம், கீர்த்தி.

7
தேவலோகாங்கிஷம்
சைனிய பூமி, கொடைவள்ளல்

8
வைசேஷிகாங்கிஷம்         
உலகாதிபதி

9
ஐராவதாங்கிஷம்
அஷ்ட ஐஸ்வர்யம்.

10
தேவேந்திராங்கிஷம்         
இந்திரபோகி, சார்வ பெளமன்



இந்த தசவர்க்கங்களுக்கான பலமறியும் கணிதமும் உண்டு.

வர்க்கங்கள்
உச்சம்
மூலத்
திரிகோணம்
ஆட்சி
நட்பு
பகை
இராசி
100
75
50
25
06
ஓரை
50
37
25
12
03
திரேக்காணம்
50
37
25
12
03
திரிசாம்சம்
50
37
25
12
03
சப்தாம்சம்
25
18
12
06
01
நவாம்சம்
50
37
25
12
03
தசாம்சம்
25
18
12
06
01
துவாதசாம்சம்
50
37
25
12
03
ஷோடாசாம்சம்
50
37
25
12
03
ஷஷ்டியாம்சம்
25
18
12
06
01



இப்படியே ஒவ்வொரு வர்க்கங்களிலும் கிரகமிருந்து, இராசியின் உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, பகை பெற்றதற்கு எவ்வளவு பலம் உண்டோ? அவற்றை ஒன்றாகக் கூட்டிய தொகை, அக்கிரகத்தின் தசவர்க்க பலமாகும். நீசம், அஸ்தமனமடைந்த கிரகங்களுக்கும் பலமில்லை.

இதற்கான விரிவான கணிதமுறைகளை, “கற்பகவிருட்சம்என்கிற ஜோதிட மாத இதழில், மிகவிரைவில் எதிர்பாருங்கள்

முத்துப்பிள்ளை
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு
ஆத்தூர். 624 701
ஆத்தூர் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்.

கைபேசி 91501 06069,  93456 56268; 

No comments:

Post a Comment