Friday 16 January 2015

வீட்டைக் கட்டிப்பார்…… 2. முத்துப்பிள்ளை


நம்மில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பது போல, நம்மில் பலருக்கு வீடே இல்லாமல் போகும் நிலையும் இருக்கும். இன்னும் சிலருக்கு குடியிருந்த வீட்டை விற்றுவிட்டு, வாடகைக்குக் குடிபோவார்கள். இதிலே இன்னும் சிலர், குடியிருந்த வீடு பாழடைந்து, குடியிருக்க முடியாமல் தத்தளிப்பதையும் கண்டுள்ளோம். இதுபோல் எண்ணற்றபேர் குடிசையிலும், தெருவோரங்களிலும், அகதிகளைப் போல, மழையிலும், வெயிலிலும், ஒண்டிநிற்க மறைவின்றி…. அந்த கொடுமைகளை என்னவென்று சொல்ல….

இவற்றிற்கெல்லாம் காரணம் நம் கர்மவினைகள் தான். ஜென்மாதி ஜென்மமாய் நாம் சேர்த்து வைத்த கர்மக் குப்பைகளின்வினைதான், இது போல வீடற்ற, நிலையும், தொழிலற்ற, மற்றும் குடும்பமற்ற நிலைகளையும் உருவாக்கித் தருகின்றன. நாம் எப்பிறப்பானாலும், கர்மவினைகளை ஒழித்துக்கட்டி ஆத்மா ஈடேற்றம் அடைய முயல்வோம்.

ஜாதகரின் வீட்டைக் குறிக்கும் கிரகமான நான்காம் அதிபதியும், வீட்டிற்கு காரகனான செவ்வாயும் கூடியோ, நான்காமதிபதி செவ்வாயின் சாரத்தைப் பெற்றோஅல்லது செவ்வாய்கிரகம் நான்காமிட அதிபதியின் சாரத்தைப் பெற்றோ, ஜாதகரின் விரைய வீட்டில் அமர, ஜாதகர் வீடுவாசலை இழந்தவராக இருப்பார். இல்லையெனில், வீடுவாசலை விற்றவராக இருப்பார்.

நான்காமாதிபதியோ, செவ்வாயோ, ஆறாமதிபதியின் இணைவோ, அல்லது சாரமோ பெற்றால், வீடுவாசல் கடனில் இருக்கும். புதுவீடாக இருந்தால், கட்டிய காலத்தில் இருந்து கடனில்தான் கிடக்கும்.

இலக்கினத்திற்கு நான்காமதிபதியோ, செவ்வாயோ, எட்டாமதிபதியின் இணைவோ, சாரமோ பெற்றால், ஜாதகர் துரதிஷ்டம் பிடித்த வீட்டில் வாழ்வார். அதனால், அவரின் திறமைகள் வெளியுலகிற்கு தெரியாமலே போய்விடும். அவ்வீட்டில் அடிக்கடி மரணங்களும் நிகழலாம்


இலக்கினதிற்கு நான்காமதிபதியும், பாக்கியத்தைத் தரும் ஒன்பதாமதிபதியும், பொன்னவன் என்று அழைக்கப்படும் குருவும் பலமற்றுப்போய் இருக்க, விரையாதிபதி பலவானாக இருக்க, ஜாதகர் வீடில்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருவார்.   

No comments:

Post a Comment