Tuesday 3 May 2016

மாந்தியின் மகிமைகள்


நம்முடைய ஜோதிடக் கணிப்பில் ஒன்பதுக் கிரகங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்தை, “மாந்தி எனும் ஒற்றைக் கிரகத்துக்குத் தருவதே இல்லை.
எந்தக் காரக உறவுகொண்ட கிரகத்துடன் மாந்தி இணைகிறதோ, அந்த காரக உறவுகளைப் பாதிப்படைய செய்யும். உதாரணத்திற்கு, மாந்தியுடன் சூரியன் கூட, தகப்பனைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதே போல் சந்திரன் என்றால் தாயைப் பாதிக்கிறது. மேலும் சுக்கிரனுடன் மாந்தி கூடும் போது கட்டிய மனைவிக்கு தேக நலத்தைக் கெடுத்து, ஜாதகர்க்கு வேசிகளின் சகவாசத்தை தந்துவிடுகிறது.. மாந்தியுடன் சனி கூட ஆயுள்தோடத்தையும், இராகு, கேதுவுடன் கூட அக்னி, நஞ்சுப் பயத்தையும் தருகிறது.
தானிருக்கும் பாவகத்தை மாந்தி கெடுப்பது, அல்லாமல், தன் முன்பின் பார்க்கும் பார்வையால், அந்த பாவகத்தையும், அதிலிருக்கும் கோள்களையும் கெடுக்கும்.

உங்களின் இந்தப் பிறப்பைக் குறிக்கும், இலக்கினதிபதியும், மாந்தியும் கூடி, முற்பிறப்பையும், இனி பிறக்கப் போகும் பிறப்பைக் குறிக்கும் இடங்களான ஐந்து, ஒன்பதாமிடங்களில் ஒன்றில் அமர, அந்தப் பிறப்பே சூனியமாக்கப்பட்டுவிடும். அப்படியானால், இந்தப் பிறப்பைக் குறிக்கும் இலக்கினத்தில் இலக்கினதிபதியும், மாந்தியும் அமர இப்பிறப்பில் அனைத்துவித தடைகளையும்  சந்திக்க வேண்டிவரும்.

உங்களின் ஜாதகத்தில் மிகப்புனிதமான ஐந்து, ஒன்பதாமிடங்களில் ஒன்றில், இலக்கினதிபதியும், மாந்தியும் அருகருகே இருந்து, சூரியன் பார்த்தால், பிதுர் சாபம் என்கிற தகப்பனுக்குப் பீடை ஏற்படும். இதில் சூரியனுக்குண்டான பக்கப்பார்வைகளும் தீமை தரும் என்றாலும், நேர் பார்வை அதிக சாபத்தைத் தந்துவிடும்.

இதேபோல், சப்தமத்தில் சந்திரன் பார்க்க, மாதுரு தோஷமும், செவ்வாய் பார்த்தால், இரத்த உறவுள்ள சகோதரர்களால் சாபமும், புதன் பார்த்தால் மூத்த அண்ணனால், குரு நிந்தையால் சாபமும், வியாழன் என்கிற குரு பார்த்தால் குலதெய்வ தோஷமும், கோவில் சொத்தையும், ஊர்ப்பணத்தை கொள்ளையிட்ட தோஷமும், சுக்கிரனால் பார்க்கப்பட்டால், கன்னிப் பெண்ணின் தோஷமும், சனியால் பார்க்கப்பட்டால், தனக்குக் கீழ் பணிபுரியும் பணியாள், அல்லது வேலையாட்களின் சாபமும் ஏற்படும்.

இந்த தோஷங்களை அறிவதன் மூலம் தங்களின் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி.   

எந்த காரக உறவுகள் கொண்ட கிரகத்துடன் குளிகன் என்கிற மாந்தி சேர்ந்தாலும், முன்பின் ராசிகளில் பார்த்தாலும், அல்லது ஒரே நட்சத்திரப் பாதமோ அல்லது ஒரே பாகைகளில் நின்றாலோ, அந்த காரக உறவுகள் கடுமையாகப் பாதிக்கும்.


ஜாதகக் கட்டத்தில் உள்ள பனிரெண்டு வீடுகளில், ஒரு சிலவீடுகளில் மட்டும் குளிகன் எனும் மாந்தி இருக்க நன்மையான பலன்களே ஏற்படுகிறது. அவைகள் எதுவென்றால், மூன்று, ஆறு, பதினொன்று என்கிற மூன்று வீடுகள் மட்டுமே. இதிலும் மூன்றில் குளிகன் இருப்பவர்களுக்கு காம இச்சையும், அதனால் போகவெறியும் கூடுதலாக இருக்கும். அதனால் காமத்தை அடக்கப் பழகினால் போதும், மற்றைய பலன்கள் ஜெயமாகவே முடியும். சகோதரர்களிடம் சுமூக உறவை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆறில் மாந்தியிருக்க, எதிரிகள் அழிவர். மந்திரமாய நாட்டம் உண்டாகலாம்.பதினொன்றில் மாந்தியிருக்க, திடீர் தனயோகம் ஏற்படும் 
உங்கள் ஜாதகத்தில் மாந்தி நின்ற வீட்டுக்குடையவன், இலக்கினத்திற்கு கேந்திர, திரிகோணங்களில் நின்றாலோ, அல்லது மாந்திக்கு கேந்திர, திரிகோணங்களில் நின்றாலோ செல்வவளம் பெருகும்.

மாந்தி என்கிற சனியின் துணைக்கோள், தான் நிற்கும் வீட்டையும், பார்க்கும் வீட்டையும் பாழ்படுத்தும்

கிரகங்களின் காரக உறவுகளாக, சூரியன் என்றால் தந்தைக்குரியவன், சந்திரன் என்றால் தாய்க்குரியவன் என்ற அடிப்படைச் செய்திகளை அறிந்து வைத்திருப்போம். பொதுவாக, ஒரு காரக உறவுக்கிரகம், அதே காரகப் பாவகவீடுகளில் அமர, அக்காரக உறவுக்கிரகத்தால் நன்மை ஏதும் ஜாதகனுக்கு ஏற்படுவதில்லை. (உ.ம்) தந்தையைக் குறிக்கும் சூரியன், தந்தையைக் குறிக்கும் பாவகமான ஒன்பதில் அமர தகப்பனால் நன்மை ஏற்படப் போவ்தில்லை. இதேபோல் தான் சந்திரன் நான்கினில் அமர, செவ்வாய் மூன்றினில் அமர, குரு ஐந்தினில் அமர ஜாதாகர்க்கு நன்மை ஏர்படப் போவதில்லை. இதேபோன்று தான் மற்றைய கிரகங்களுக்கும் உண்டாகிறது.

காரக உறவுக்கிரகத்துடன் மாந்தி கூடி, அதே காரகப் பாவகத்தில் அமர, அந்த உறவே ஜாதகர்க்கு இல்லாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. (உ.ம்) இலக்கினத்திற்கு ஒன்பதில் சூரியனுடன், மாந்தி அமர்ந்தாலும், ஜாதகன் தந்தையால் கைவிடப்பட்டவனாக இருப்பான். இதேபோன்றுதான், மற்றையக் கிரகங்களுக்கும்…. மேலும்,

இலக்கினத்திற்கு இரண்டாமிடம் வாக்குஸ்தானமாகும். பேசுவதற்கான அதாவது, வாக்கின் காரகக் கிரகமான குருவுடன் மாந்தி கூடி, அதே இரண்டாமிடத்தில் அமர, ஜாதகனின் பேச்சு ஈனத்தனமான, கண்டனத்துக்குரியப் பேச்சாக இருக்கும். இதேபோல, மற்றைய காரகங்களுக்கும் காணவேண்டும்.                                                                                                                                                                                       முத்துப்பிள்ளை. 91501 06069, 0451-2556525

No comments:

Post a Comment