Wednesday 3 February 2016

பாட்டுக் கோட்டை



கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தான் எழுதிய பாடலுக்கான சம்பளத்தைப் பெற, படத் தயாரிப்பாளரை சந்திக்க சென்றார். உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. மளமளவென அலுவலகத்துக்குள் நுழைந்தார். அங்கே படமுதலாளி, அடுத்தப் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்க, பட்டுக்கோட்டையார் வாசலிலே நின்றார். ஏறெடுத்தப் பார்த்த பட முதலாளி, தன் கண்களால் ஏற இறங்கப் பார்த்து விட்டு, வந்த நோக்கம் என்ன என்பது போல, நெற்றியைச் சுருக்கிப் பார்த்தார். உடனே, கவிஞர், “தங்கள் படத்திற்கு எழுதிய பாடலுக்கான சம்பளத்தை வாப்fகிப் போக வந்தேன்” என்றார். அதற்கு படமுதலாளி, “ நாளைக்கு வாரும் தர்றேன்” என்றார். கவிஞருக்கு என்ன துன்பமோ, இன்றே பணத்தை வாங்கியே தீரவேண்டும் என்பது போல, நின்று கொண்டே இருந்தார். மீண்டும் பார்த்த பட முதலாளி, “ என்ன நின்னுண்டு இருக்கேள். போ .. போ ,, போய்ட்டு நாளை வாரும். இல்லைன்னா நின்னுண்டே இரும்” என்று கூறுகிறார். முகத்தில் கோபத்தைக் காட்டாத கவிஞர், அங்கே கிடந்த தாளை எடுத்து வேகமாக ஏதோ எழுதி, “ முதலாளி” முன்னே எறிந்துவிட்டு சென்று விடுகிறார். அந்த தாளில்,

தாயால் வளர்ந்தேன்
தமிழால் அறிவு பெற்றேன்
நாயே! … நேற்று உன்னை
நடுத்தெருவில் சந்தித்தேன்
நீயார் என்னை
நில்லென்று சொல்ல”  

என்றிருந்தது  கவிஞனின் கோபத்தினைக் கண்ட முதலாளி ஒரு நிமிடம் ஆடியே போய்விட்டான்.


நீ கவிஞன் டா! நீ… நீ… கவிஞன் டா

No comments:

Post a Comment